பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் பிரசாரம் செய்யும் நேரம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடிக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அதன்படி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியில் பிரசாரம் செய்வதற்கான நேரம் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.