மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில நபர்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்குப் புறம்பாக விற்கின்றனர். மேலும் சிலர் மதுவை பதுக்கி வைத்து மது பிரியர்களிடம் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் அயோத்தியில் பேச்சியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே சேடப்பட்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றனர் அப்போது பேச்சியம்மாள் 19 மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் பேச்சியம்மாளையும் கைது செய்தனர்.