மதுரையில் போலி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் காண்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் அங்கு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இவர்கள் பெட்டி கடையில் வைத்து போலி மது பாட்டில்களை விற்பனை செய்வதாக சிந்துப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பெட்டிக்கடைக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில் அவர்கள் 65 மது பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பெட்டிக் கடைகளின் 2 உரிமையாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.