நெல்லையில் மதுவினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது உள்ள நவீன யுகத்தில் சில நபர்கள் ஆங்காங்கே சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியில் கூலித் தொழிலாளியான சுதன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணாபுரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மதுவை விற்பனை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுதனை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்த 48 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.