பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மூன்றுபேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம் அண்ணா காலனியில் வசித்து வரும் மாரிமுத்து(26), சுசீந்திரம் மறுகால்தலையை சேர்ந்த குட்டி(22), வர்த்தக நாடார் குடியிருப்பை சேர்ந்த சகாயகவின் ஆகிய 3 பேரும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் மண்டைக்காடு புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது இவர்கள் மூன்று பேரையும் பிடித்ததாகவும் இவர்களிடமிருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர் என்பதும் தெரியவந்தது.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.