நெல்லையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்ற 31 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது உள்ள நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா, புகையிலை, மது போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலிருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மணிவண்ணன் பணிபுரிந்து வருகிறார்.
இவர் அம்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்பனை செய்வோர மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட 31 நபரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களிடமிருந்து 146 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.