தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 9 பேரையும், அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர், தாளமுத்து நகர், திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 77 மது பாட்டில்கள் மற்றும் 2000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன்பின் அந்த 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.