லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சியில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அங்குள்ள கடைவீதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் வளத்தி பகுதியை சேர்ந்த தர்மன் என்பதும், மணலிப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடமிருந்த லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.