நெல்லையில் சட்டத்திற்குப் புறம்பாக மது விற்ற 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தற்போது உள்ள நவீன யுகத்தில் ஆங்காங்கே சில நபர்கள் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதாவது கொலை, கொள்ளை, மது விற்றல் போன்ற செயல்களை செய்கின்றனர். இந்நிலையில் இதனை தடுப்பதற்கு காவல்துறையினர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே இவ்வாறான செயல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் நெல்லை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் சட்டத்திற்கு புறம்பாக மதுவை விற்பனை செய்பவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 11 பேர் மது பாட்டில்ளை பதுக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் அதனை விற்பனை செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களை கைப்பற்றியுள்ளனர்.