மெக்சிகோ நாட்டில் மைக்கோவா பகுதியில் நடைபெற்ற சேவல் சண்டையில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் அங்கிருந்த சிலர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 20 பேர் உயிரிழந்து நான்கு பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் 3 பேர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது.
இது போதைப்பொருள், கிரிமினல், மற்றும் கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் நடத்திய சண்டை என மத்திய பொது பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு மத்திய குழுவினர்கள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் இந்த சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை இன்னும் மறைமுகமாக நடத்தி வருகின்றனர்.