Categories
தேசிய செய்திகள்

“சட்டத்தை மீறி தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்வீடன் நாட்டினர்”… 3 பேர் அதிரடி கைது…!!!!!

வெளிநாட்டினர் சட்டத்தை மீறியதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் அசாமில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். பல்வேறு தேவாலயங்களில் அமைப்பான யுனைடெட் சர்ச் போரம் மூலமாக  திப்ருகார் மாவட்ட நிர்வாகத்தின் உடைய அனுமதியுடன் மூன்று நாள் பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருக்கின்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று பேர் வெளிநாட்டினர் சட்டத்தை மீறி புதன்கிழமை திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் சுற்றுலா பயணிகள் மூன்று பேர் மீதும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்களை தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு துணை கமிஷனர் மற்றும் மாவட்ட காவல்துறை கோர்ட் அதிரடி உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மூன்று பேரும் இன்று கவுகாதிக்கு அனுப்பப்பட்டு அதன் பின் ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளார்.

Categories

Tech |