Categories
அரசியல் மாநில செய்திகள்

“சட்டப்படி சந்திப்பேன், தர்மம் வெல்லும்”…. கே.டி.ராகவன் பதவி விலகல்…. திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தின் பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகுவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று இன்று வெளியான நிலையில், பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக மக்கள் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் நான் யார் என்பது நன்றாக தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் என்னைப் பற்றி தெரியும். நான் 30 வருடமாக எந்த ஒரு பிரதி பலனும் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன். என் கட்சியையும் என்னையும் கலங்க படுத்துவதற்காக தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனால் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தேன். என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்து கொள்கிறேன். சட்டப்படி சந்திப்பேன், தர்மம் வெல்லும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |