Categories
உலக செய்திகள்

சட்டப்படி நானே அதிபர் – தலிபானை ஆட்டம் காணவைக்கும் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.  இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவாகி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே ட்விட்டரில் அறிவித்துள்ளார். அதிபர் இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோஆப்கான் சட்டப்படி துணை அதிபர் பதவிக்கு வரவேண்டும். அதுதான் இப்போது இருப்பதால் அடுத்த அதிபர் நானே என்று கூறியுள்ளார். இவர் தலிபான்களுக்கு ஒருபோதும் தான் அடிபணிந்து போவதில்லை என்று சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |