உடல்நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ள சூழ்நிலையில், அவருடைய விலகலை கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். உடல் நலன் காரணமாக அவர் அரசியலிலிருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர்த்து, பாஜக-வில் இணையபோகிறேன் என கூறவில்லை. பாஜக ஒன்றும் ரிடைர்மெண்ட் ஆபீஸ் இல்லை எனவும் டி.கே.எஸ். விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க செய்திதொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “திமுக சட்டதிட்டத்தின்படி துணை பொதுச் செயலாளர்களில் ஒருவர் மகளிர் ஆகவும், ஒருவர் தாழ்த்தப்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. இந்த வருடம் பொதுச்செயலாளர், துணை பொதுச் செயலாளருக்கான தேர்தல் வரவுள்ளது.
முறையான அறிவிப்புக்குப் பின் சட்ட விதிப்படி புது துணை பொதுசெயலாளர் நியமிக்கப்படுவார்கள் என கூறினார். துணைபொதுச்செயலாளர் 2 பேர் கட்சியிலிருந்து விலகியிருப்பது குறித்த கேள்விக்கு, ஒருவர் உடல்நலிவு காரணமாக விலகிக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அரசியல் ரீதியாக ஒருவர் விலகி இருக்கிறார்.
இப்போது துணை பொதுச்செயலாளர் 5 பேர் இருக்கிறோம். தேவைப்பட்டால் அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம். உடல்நலன் காரணமாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலிலிருந்து விலகுகிறேன் என கூறியுள்ளாரே தவிர்த்து பாஜக-வில் இணையபோகிறேன் என்று கூறவில்லை. ஆகவே அதனை கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது எனக் கூறினார்.