கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணை பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியனர் பாதையாத்திரை நடத்துவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் பேசிய கிராம வளர்ச்சி மந்திரி ஈஸ்வரப்பா, மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறவில்லை. எனவே அரசியல் நோக்கத்திற்காக இந்த பாத யாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளனது.
அதனால் அவர்கள் பாதையாத்திரை நடத்தட்டும் , அதற்கு நாங்கள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இந்த மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது கன்னட நகர் ஒவ்வொருவரின் விருப்பம் என்றும் சட்டப்படி மேகதாதுவில் அணையை உறுதியாக கட்டப்படும் என்றார். அதனைத் தொடர்ந்து மாவட்ட தாலுகா பஞ்சாயத்து தேர்தல் குறித்து ஒரு குழு அமைத்து அதில் வார்டு வரையறை குறித்து அந்த குழு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
இதையடுத்து நளின்குமார் கட்டீல் தலைமையில் பா.ஜனதா பல்வேறு இடைத் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது என்பதால் கட்சியின் மாநில தலைவராக அவரை நீடிக்க வேண்டும். மேலும் பிட்காயின் மோசடி குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அரசின் மீது காங்கிரஸ் அடிக்கடி குற்றம் கூறுவது சரி இல்லை என்றும் எங்கள் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அடிக்கடி கர்நாடகத்திற்கு சென்று வருகிறார் இன்று அமைச்சர் ஈசுவரப்பா கூறினார்.