Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவைக்கு மாட்டை அழைத்து வந்து….. பரபரப்பை கிளப்பிய பாஜக எம்எல்ஏ….!!!!

ராஜஸ்தானில் சட்டப்பேரவைக்கு மாட்டை அழைத்து வந்த பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது .இந்நிலையில் அம்மாநிலத்தில் கால்நடைகள் இடையே பரவும் தோல் கட்டி நோயை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி சட்டப்பேரவைக்கு பாஜக எம்எல்ஏ மாட்டை அழைத்து வந்துள்ளார்.

அங்கிருந்து கூட்டத்தைக் கண்டு மாடு மிரண்டு ஓடவே ,கோமாதா கூட காங்கிரஸ் அரசு மீது கோபமாக உள்ளது. லம்பி ஸ்கின் நோயை கட்டுப்படுத்த தேவையான மருந்து ஊசிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நோயால் பாதிக்கப்படும் பசுக்களை காப்பாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |