Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தல்…. ட்ரெண்டிங்கில் #Bulldozer_Is_Back…. கொண்டாட்டத்தில் பாஜக-வினர்…..!!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ட்விட்டரில் #Bulldozer_Is_Back என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் இனி பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று எதிர்க்கட்சியினர் கூறி வந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை புல்டோசருடன் ஒப்பிட்டு #Bulldozer_Is_Back என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் செய்யப்படுகிறது.

Categories

Tech |