Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க கொள்கை முடிவு – அமைச்சர் சி. வி. சண்முகம்!

அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சி. வி. சண்முகம் தகவல் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 4ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் குறித்த விவாதத்தின் போது, அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் கூறியுள்ளார். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க 3.58 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் மதுரவாயல் நீதிமன்றங்கள் விரைவில் திறக்கப்படும்.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கிருஷ்ணகிரியில் தொழிலாளர்கள் அதிகம் உள்ளதால் தொழிலார் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது கொள்கை முடிவாக உள்ளதாகவும், பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |