Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று : கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் – அமைச்சர் பெஞ்சமின்!

கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கி 3ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். கோவையில் தங்க நகை செய்யும் தொழில் சரிவை நோக்கி செல்வதாகவும், அதனை மேம்படுத்தும் வகையில் தங்க நகை பூங்கா அமைத்து தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பெஞ்சமின், கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் வட்டத்தில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் துவங்கும் என தெரிவித்தார். இதே போல் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகளிலும் புதிய தொழிற்பேட்டை அமைப்பது குறித்து முடிவெடுக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

Categories

Tech |