Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் 3 அறிக்கைகள்…. முதல்வரின் முடிவு என்ன….? கலக்கத்தில் அதிமுக….!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படும். கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூடிய நிலையில் அடுத்ததாக நவம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும். ஆனால் முதல்வர் நவம்பர் மாதத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முன்பு சட்டப் பேரவையை கூட்டுவதற்கு முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

அதன் பிறகு ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை போன்றவைகளும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையில் ஆறுமுகசாமி ஆணையம் சசிகலா, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ், மருத்துவர் சிவகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அகியோர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இதைப் பற்றி பேசும்போதே சில விஷயங்களை வெளிப்படையாக கூற நேரிடும் என்பதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விசாரணை வளையத்திற்குள் ஓ. பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறவில்லை. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த சமயத்தில் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகளை வைத்து அதிமுகவை ஆட்டம் காண வைப்பதற்கு திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சட்டப்பேரவையில் 2 அறிக்கைகளும் மேலோட்டமாக மட்டுமே தாக்கல் செய்யப்படுகிறது என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் துப்பாக்கி சூடு தொடர்பான சம்பவத்தில் சில அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஏற்கனவே அரசு அதிகாரிகள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் திமுகவுக்கு வருகிற தேர்தலில் சிக்கலாக அமையும்.

இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான சம்பவத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயக்கம் காட்டுவதாகவே தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது. ஒருவேளை ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையில் மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். இதனால் 2 அறிக்கைகளின் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும். ஒருவேளை நடவடிக்கை எடுக்கா விட்டாலும் அதிமுகவிற்கு எதிராக திமுக தக்க சமயத்தில் அந்த அறிக்கைகளை பயன்படுத்தும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |