Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் பிடிஆர் சொன்ன குட் நியூஸ்…. இளைஞர்கள் செம ஹேப்பி …!!!!!!

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. துறை ரீதியாக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசிய போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

“கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு, தேவைப்படும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.மேலும், தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மேலும் அவர், “அரசுப் பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு சார்பில் இன்னும் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழுவின் அறிக்கை அடிப்படையில் தேவையான பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, காலியாக இருக்கும் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும்” என்று அறிவித்ததிருக்கிறார். அரசுப் பணியை எதிர்பார்த்து போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் தயாராகிவருகின்றார்கள். அந்த வகையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு இளைஞர்கள் மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |