தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி 2020 – 23 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6ஆம் தேதி முதல் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொது பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். இன்று சட்டப் பேரவைக் கூட்டத்தில் சென்னைஅயோத்தியா மண்டபம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இதில் முதல்வர் ஆவேசத்துடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை எடப்பாடிபழனிசாமி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் சிரித்துக் கொண்டே நடந்து சென்றுள்ளார். அந்த நேரம் பெண் நிருபர் ஒருவர் திடீரென எடப்பாடி பழனிச்சாமி இடம் மைக்கை நீட்டி உள்ளார். ஆனால் எடப்பாடிபழனிசாமி அவருக்கு பேட்டி கொடுக்காமல் அருகில் இருந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகனும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் காரில் சட்டென்று ஏறுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் சற்றும் எதிர்பாராத அங்கிருந்த போலீசார் எடப்பாடி பழனிசாமி தடுத்து நிறுத்தி காதல் கிசுகிசுத்தனர். இதனால் உஷாரான எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து நகர்ந்து பின் தனது காரில் ஏறியுள்ளார். இதன் பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.