Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை கூட்டம்…. சபாநாயகரின் முடிவு?….. காரணம் தேடும் எடப்பாடி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிந்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த மே மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்த நிலையில், சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பிரமுகர்களுக்கு இரங்கல் குறிப்பு, இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை தள்ளி வைக்கப்படுகிறது. தொடர்ந்து அலுவலக கூட்டம் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அதில் கூட்டத்தொடரை எத்தனை நாள்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்தக் கூட்ட தொடரில் துணை நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான அருணாச்சல ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணியில் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதனையடுத்து இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான அதாமுக முழுவதும் கலந்து கொள்ளுமா அல்லது வெளிநடப்பு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரு அணிகள் உருவாகி பிரிந்து நிற்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் ஆர்.பி. உதயகுமார் தொடர்வார் என எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகருக்கு பலமுறை கடிதம் எழுதி உள்ளார். அதனைப் போல அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நடைபெற்று வருகின்ற நிலையில் அதுவரை எந்த முடிவெடுத்தாலும் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்சும் சபாநாயகர் கடிதம் எழுதி உள்ளார். இந்த விவாகரத்தில் சபாநாயகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை ஓபிஎஸ் சாதகமாக முடிவு வெளியானால் அவர் அருகில் அமர்ந்து கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உட் கட்சி பிரச்சினை காரணமாக அவையை புறக்கணித்தால் மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் திமுக அரசை குறி வைத்து ஏதேனும் காரணம் சொல்லி புறக்கணிக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |