தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து நேற்று தமிழக 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. சட்டப்பேரவை எம்எல்ஏவாக முதல்வர் முக ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என கூறி பதவியேற்றார். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக திமுக எம்எல்ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வானார். சட்டப்பேரவை துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு இன்று பதவியேற்கிறார்.