Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தல்… ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1500…. உறுதியளித்த காங்கிரஸ்….!!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வரும் ஹிமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைமை தேர்தல் பார்வையாளருமான பூபேஷ் பகேல் ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு திங்கட்கிழமை பயணம் மேற்கொண்டார். அப்போது சிம்லாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை அறிவித்தார்.

அதன்படி காங்கிரஸ் பெற்று ஆட்சி அமைத்த 10 நாட்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்ட அமல்படுத்தப்படும். அதுமட்டுமில்லாமல் வீடுகளுக்கும் மாதம் 300 யூனிட் மின்சார இலவசமாக வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு மாதம் நிதி உதவி ரூ.1500 அளிக்கப்படும். இதற்கு எவ்வாறு நிதி ஆதார திரட்டப்படும் என்ற கேள்விக்கு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில பட்ஜெட்டில் உரிய அறிவிப்புகள் சேர்க்கப்படும். மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இவை அனைத்தும் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |