Categories
தேசிய செய்திகள்

சட்டப் படிப்புகளுக்கு கிளாட் நுழைவுத் தேர்வு….விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்….. முக்கிய அறிவிப்பு….!!!!

சட்டப் படிப்புகளுக்கு டிசம்பர் 18ஆம் தேதி கிளாட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.அதன்படி அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை காண தேர்வு வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதில் விருப்பமுள்ள மாணவர்கள் நவம்பர் 13 ஆம் தேதிக்குள் https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும் எனவும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |