3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்ட கல்லூரிகளில் உள்ள மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மாணவ மாணவிகள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .
மேலும் கலந்தாய்வு நடைமுறைகள், விண்ணப்பக்கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலை. பதிவாளா் ரஞ்சித் ஒமென் ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.