சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது 107 வது அரசியல் சாசன சட்டத்தின் படி தன்னாட்சி பெற்ற கூட்டுறவு இணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு இரண்டு முறை தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது சங்க தேர்தல் நடைபெற்று கூட்டுறவு சங்கம் சிறப்பாக இயங்கி வந்தது.
அவர் மறைவிற்குப் பின்னும் நடைபெற்றது. அதிமுக கொண்டுவந்த காரணத்தினாலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளின் பதவிக்காலம் வேண்டுமென குறைக்கப்பட்டிருக்கிறது. திமுக அரசு ஒட்டுமொத்தமாக கூட்டுறவு சங்கங்களை அழைத்து தங்களுடைய கட்சியை சேர்ந்தவர்களை கொண்டு வர வேண்டுமென செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 நிமிடம் பேசினால் அமைச்சர்கள் 50 நிமிடம் பதிலளித்து நாங்களே முழுவதும் பேசியதாக எடுத்துக் கொள்கின்றார்.
பிரதான எதிர்க்கட்சி நேரம் ஒதுக்கி தரப்படவில்லை உறுப்பினர்கள் இப்படித்தான் பேச வேண்டுமென அமைச்சர் கூறுவது ஏற்புடையதல்ல. சட்டமன்றத்தில் பேசும் உரிமையும் பறிக்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு 21 பொருட்கள் முறையாக வழங்கவில்லை தவறுகளை ஆதாரத்துடன் எடுத்துக் கூறிய போதும் உணவுத்துறை அமைச்சர் எங்கும் தவறு நடைபெறவில்லை என கருத்தை அவையில் எடுத்து வைத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சாலையே போடமால் பணம் பெற்றிருப்பது குறித்து செய்தி வெளியான பின் தற்போது அவசரமாக சாலை போட்டு வருகின்றனர். இது பற்றி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் புகார் அளித்துள்ளார். இந்த அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.