சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மழலையர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா வாக்களித்தார்.
அதேபோல் காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி வாக்களித்தார். கண்ணங்குடி ஒன்றியம் கிளைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பாளர் தேர்போகி பாண்டி வாக்களித்தார். காரைக்குடி ஆலங்குடி வீதியில் உள்ள அரசு பள்ளியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் இராசகுமார் வாக்களித்தார்.