Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…. சிவகங்கையில் வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!!

சிவகங்கையில், சட்டமன்ற தேர்தலுக்கான  4 தொகுதிகளில் மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி நடைபெற்றது .

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான  திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய இடங்களில் 1679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த பணியானது மாவட்ட ஆட்சியர்  மதுசூதனன் ரெட்டி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கணினி மூலம் தொகுதி அடிப்படையில் ,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பிரித்து வைத்தார். பின் அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாடு இயந்திரம் ஆகியவை கூடுதலாகவே தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |