தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அந்த மாநில தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர். இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வரும் இந்த குழுவினர் அரசியல் கட்சிகள் பிரமுகர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினருடன் முதலில் ஆலோசனை மேற்கொள்கின்றன.
இதனை அடுத்து தலைமை செயலாளர், அரசுத் துறை செயலாளர்கள், காவல்துறை இயக்குனர்கள் உள்ளிட்டோருடனும் ஆலோசனை நடைபெறுகின்றன. இதனை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர்கள் குழு புதுச்சேரியில் சென்று அங்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.