மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கிவைத்தார்.
பிகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான முதற்கட்ட பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தற்போது ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பணியில் களம் இறங்கியுள்ளார். இதன் முதல்கட்டமாக காணொலி மூலம் பீகார் மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு ராகுல் பேசினார். அதில் அவர் தேர்தல் பரப்புரையில் முழு மூச்சாக இறங்க போவதாக கூறியுள்ளார்.மேலும் ராகுல் காந்தி பேசுகையில் கூட்டணி, தொகுதி பங்கெடுப்பு போன்றவற்றின் விவரங்கள் அனைத்தும் பிறகு முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்படும். இப்போது கள அரசியலில் நாம் பல்வேறு தீவிரப் பணிகள் செய்து ஆட்சியைப் கைப்பற்ற கடும் முயற்சியுடன் உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பிகாரில் மதசார்பற்ற கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைமுறையில் உள்ளது. இந்த ஆட்சியில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள கூட்டணி ஆட்சி,பாஜக, ராம் விலாஸ் பாஸ்வான் தலைமையில் உள்ள லோக் ஜனசக்தி கட்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இப்போது இருக்கும் சூழலில் தொகுதி பங்கீடு தொடர்பாக லோக் ஜனசக்தி கட்சி அதிருப்தியில் உள்ள நிலையில் கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற கருத்தும் பரவி வருகிறது. காங்கிரஸ் கட்சியானது முக்கிய எதிர்க்கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளக் கூட்டணியிலேயே இருந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.