தமிழக சட்டமன்ற வளாகத்தில் திடீரென்று ஒரு நபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்போது காவல் துறை தடுப்பு அருகே ஒரு நபர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயற்சி செய்தார். இதை கவனித்த காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி அவரை பத்திரமாக மீட்டனர். முதற்கட்டமாக ஊடகத்துறையின் அடையாள அட்டையை காட்டி கலைவாணர் அரங்கத்திற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் காவல்துறையினர் அவரை வாகனத்தில் ஏற்றி விசாரணை செய்தபோது தனது பெயர் ஆறுமுகம் என்றும், தான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். கலைவாணர் அரங்கில் சட்டமன்ற நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது வெளியில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.