பெண்கள் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கவேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் கூறியுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் சென்னையை பெண்களுக்கான பாதுகாப்பான நகரமாக ஆக்குவோம் என்ற தலைப்பில் அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பெண்கள் எந்த சூழ்நிலையிலும் காரணமில்லை என்பதை புரிந்துக்கொண்டு தைரியமாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கவேண்டும் என்று கூறினார்.
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி எஸ். ஜாங்கிட் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது, மக்களுக்கு சமூகத்தின் மீதான பொறுப்பு குறைந்து வருவது ஆபத்தானது என கூறினார். திமுக எம்.பி. கனிமொழி அவர்கள் கூறுகையில், பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகளை குறைக்க வேண்டும் என்றால் பெண்கள் சட்டம் இயற்றக்கூடிய இடத்தில் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.