கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தங்களது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது.
மாநிலத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஒன்றரை ஆண்டு திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை அதிகரித்து இருக்கிறது என திமுக அரசை முதல் முறையாக மிகக் கடுமையாக ஓபிஎஸ் விமர்சித்தார். மக்களை காக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை எனவும் அவர் வற்புறுத்தி உள்ளார்.