சட்டம் ஒழுங்கை காவல்துறை பார்த்துக் கொள்ளும் என்று CAA போராட்ட தடை வழக்கில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
CAAவை கண்டித்து நடைபெற இருக்கும் சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்க்கு தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் , நாளை இஸ்லாமிய அமைப்புகள் தமிழகசட்டசபை முற்றுகை போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். அதை தடை செய்ய வேண்டும் என்றும் , அதை தடை செய்வதற்கு காவல் துறைக்கும் , தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் , ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் , சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் , சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எவ்வாறு கையாளவேண்டும் என்பதை காவல் துறையை கவனித்து கொள்ளும் என்று தெரிவித்து வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர்.