செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் அதற்கான புள்ளி விவரங்கள் ஏதும் இல்லாமல் இப்படி ஒரு நிலைபாட்டை எடுத்தது சட்டப்படி ஏற்புடையது அல்ல. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 2011 சென்சஸ் அடிப்படையில் வன்னியர் சமூகத்தின் மொத்த மக்கள் தொகை எது என்று தெரியாது அரசுக்கு….
ஏனென்றால் ஓபிசி மக்களுக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு கிடையாது. மதவாரி கணக்கெடுப்புகள் தான்…. இந்துக்கள் எவ்வளவு மட்டும்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ளது. அகில இந்திய அளவில் எஸ்.சி / எஸ் டி ஒவ்வொரு சாதியிலும் தனித்தனியே கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 74 சாதிகள் இருக்கின்றன என்றால் தனித்தனியே எவ்வளவு சதவீத மக்கள் தொகை கொண்டிருக்கிறேன் என்பதை மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவாகியிருக்கிறது.
அதேபோல ஓபிசிக்கோ, பார்வர்டு கம்யூனிட்டி சமூகத்தினருக்கோ சாதிவாரி அடிப்படையில் மக்கள் தொகை எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தாமல் எந்த அடிப்படையில் வன்னியர் சமுதாயத்திற்கு இத்தனை சதவீதத்தில் வழங்கியிருக்கிறார்கள். இது குறைவாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா?
என்பதை இதை எப்படி புரிந்து கொள்வது என்கிற அடிப்படையில் தான் இந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக நீண்ட நாள் கோரிக்கையாக முன் வைக்கப் படுகிற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு இந்திய ஒன்றிய அரசு அல்லது மாநில அரசு உடனே முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம் என திருமாவளவன் தெரிவித்தார்.