Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டுவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு விவேகானந்தர் நகரில் தங்க பாண்டியன் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வத்தலகுண்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அவருடைய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தங்கபாண்டி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவான கண்ணன் என்பவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |