Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் முத்துசாமி ( 48 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மதுபானங்களை கோட்டையூரில் உள்ள தனியார் சேம்பம் அருகே விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளையான்குடி காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவரிடம் ஆறு மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த ஆறு மது பாட்டில்களையும், ரூபாய் 100-ஐயும் கைப்பற்றினர். அதோடு மட்டுமல்லாமல் இளையான்குடி காவல்துறையினர் அரசு அனுமதியின்றி லாப நோக்கத்தோடு மது விற்பனை செய்ததற்காக முத்துச்சாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |