பீகார் மாநிலத்தின் மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீட்டு கூட்டத்திற்கு முன்னதாக நடந்த ஜனதா தர்பார் என்ற நிகழ்ச்சிக்கு பிறகு நிதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கள்ளச்சாராய மரணங்களை சாக்காக வைத்து மது விலக்கு பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மதுவை உட்கொண்டால் மக்கள் இறந்து விடுவார்கள். இது ஒரு மோசமான பொருள். ஆனால் இது தெரிந்தும் ஏன் மக்கள் மது அருந்துகிறார்கள்? என எனக்குப் புரியவில்லை.
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த அதிகார வரம்பில் போதிய நடவடிக்கை எடுப்பதற்காக உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மதுபான வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.