சட்டவிரோதமாக லாரியில் புகையிலை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காதி போர்டு காலனி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில் சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக புகையிலையை லாரியில் கடத்தி தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியில் வந்த மணிகண்டன், சுப்புராஜ், சக்தி, முருகன், ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை மூட்டைகள் மற்றும் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.