Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூதலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பூதலூர் பகுதியில் சங்கரமூர்த்தி, கோவிந்தராஜ் என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அதன்பின் இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 99 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |