அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பால்பாண்டி புஷ்பம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதுகுறித்து சக்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் பட்டாசு தயாரித்த தம்பதியினரை கைது செய்து அவர்களிடம் இருந்த 60 ஆயிரம் மதிப்பிலான வெடி பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.