கோவையை அடுத்த காரமடை பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரமடை அருகில் கோடதாசனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (51), அதே பகுதியை சேர்ந்த பிரபு (27), ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (40), ராமமூர்த்தி ( 39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (25) காரமடையை சேர்ந்த ஆறுமுகம் ( 56) சிறுமுகை சேர்ந்த பாபு ( 48) போன்றோர் காட்டு யானை தந்தத்தை வைத்திருந்ததும், அதனை விற்பதற்கு தயாராக இருந்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் காரமடை அருேகயுள்ள கட்டாஞ்சி மலையடிவாரத்தில் இறந்துகிடந்த ஆண் யானையின் உடலிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பு அந்த தந்தங்களை எடுத்து வந்ததும் தெரியந்தது. அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த 2 யானைத் தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின் வனத்துறையினர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு, இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை சேகரித்து எடுத்து வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 9 பேரை கைது செய்தனர். அதன்பின் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.