Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் மற்றும் பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதன்பின் உதயகுமார் மற்றும் பாலகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 163 லாட்டரி சீட்டுகள் மற்றும் 5000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |