Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வசமாக மாட்டிக் கொண்ட 2 பேர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி கஞ்சா மற்றும் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் சுதந்திரதின பூங்கா அருகில் சந்தேகத்துக்கு உரிய அடிப்படையில் நின்றுக்கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையையும் காவல்துறையினர் சோதனையிட்டனர்.

அதில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதை ஆந்திராவிலிருந்து அவர்கள் கடத்தி வந்திருக்கின்றனர். அதன்பின் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து விசாரணையில் அந்த பெண் கோடம்பாக்கம் ஆண்டாள் நகரை சேர்ந்த ஷீபா ஜோதி (31) என்பதும், மற்றொரு நபர் திருவேற்காடு ஐயப்பன்நகர் முதல் தெருவை சேர்ந்த பாஸ்கர் (36) என்பதும் தெரியவந்தது. இதில் ஷீபா ஜோதி மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |