Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்….. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பார்த்திபனின் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்லக்கண்ணு என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி 160 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுபையர்(49) பசாரத் முகமது(23) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |