சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில், அவர்கள் அகரப்பட்டியில் வசிக்கும் சந்திரசேகரன், வீரக்குமார், வெங்கடேஷ், ராஜா மற்றும் முருகானந்தம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.