சட்டவிரோதமாக 117 புகையிலை பாக்கெட்டுகளை கடந்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விஜயகுமார் என்பவர் சட்டவிரோதமாக 117 பாக்கெட் புகையிலையை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.