சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுறத்தில் வருவாய் அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில் சட்டவிரோதமாக லாரியில் மண் கடத்திவந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மணல் கடத்தி வந்த வேல்சாமி, முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் .மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவத்துறையினர் அவர்களிடமிருந்த லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.